Thursday, December 31, 2009

முழம்போட்டும்

அளக்கமுடியவில்லை

பூவின் அழகு !

--- ஏம்பல் ராஜா

Thursday, December 24, 2009

குழப்பம் அழகு !
நீ போட்டப்
பின்னல் கோலம் !

Thursday, December 17, 2009

உலகமயமாக்கலால் ஜனவரி ஒன்று
முதலமைச்சருக்காக தை ஒன்று
பாரம்பரியமாய் சித்திரை ஒன்று
மூன்று முறை புத்தாண்டு கொண்டாடும்
முட்டாள்கள் நாங்கள் !

Thursday, November 19, 2009



மங்களகரமான துவக்கம்
பிள்ளையார் சுழியுடன்
மரண வாக்குமூலம்

ரகசியம்


அடைமழையோ சாரலோ
தெரிந்திருந்தும் சொல்வதில் லை
முதல்த்துளி !

Saturday, October 3, 2009

என்னைப் போல் ஒருவன்

டாடி மம்மினு மழலை சொன்னா சுந்தர

டமிலன் அடையுறான் பெருமை !

கோடி கோடியா கொழிச்ச கேடி கும்பிட்டா

ஓட்டு போடுறான் எருமை !

Sunday, September 13, 2009


என்னைப் பார்த்ததும்

தலையைக் குனிந்து நீ

விழிகளால் நிமிர்கிறாய் - உன்

நெற்றியில் பூக்கிறது ஹைகூ !

Wednesday, August 19, 2009


மழைநீர் விழுந்த
மண்ணின் குழிவாய்
அழகாய் இருக்கிறது
நீ பேசிச் சென்றபின்
என் மனப்பரப்பு !

Sunday, August 16, 2009

அவசர அவசரமாய்
அள்ளி வீசப்படும்
எலும்புத் துண்டுகளுக்காய்
எச்சில் ஒழுகும்வரை
நாய்களே ...!
உங்களுக்குத் தெருவே கதி !

Friday, August 14, 2009


பூ அழகு !
பூவைவிடவும் பூவை அழகு!
அடி பூவை!
நீ பூ வை !
அழகோ அழகு!

Thursday, August 13, 2009

தன் கணவர் உயிர்முன்
தமிழர் உயிரெல்லாம் ம..!
ஆம் !
கொலையும் செய்வாள் பத்தினி !

Monday, August 10, 2009

மக்களாட்சி

தனக்குப் பின் நாடாள
பதவிகளைப் பக்குவமாய்ப்
பகிர்ந்து அளிக்கிறார் முதல்வர்
தான் பெற்ற மக்களுக்கு....!

Thursday, August 6, 2009

அமெரிக்காவுக்கும் நமக்கும் ஆகாது !
உண்மை தான்
எங்கள் காதல்களுக்குக் கூட
வில்லன்களாய் வருகிறார்கள்
அமெரிக்க return மாப்பிள்ளைகள்

Tuesday, August 4, 2009

அரசியற் போரது நீளும் !
பேராயுதம் போலுனைச் சூழும்!
பேரினவாதம் வீழும்!- உன்
ஆணவம் மண்ணடி மாளும்! தமிழர்தம் உரிமைகள் மீளும்!
தமிழினம் தமிழீழம் ஆளும்!

Sunday, August 2, 2009

ஓடி விளையாடு பாப்பா
உரக்கப் படித்தது
போலியோ குழந்தை!

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்