Wednesday, July 21, 2010

தொணதொண என நீட்டி முழங்குவாய் ....
அறிகுறிகள் இன்னதெனப் பகுத்தறிதல் வேண்டும் !
இடமென்றால் வலம் திரும்புவாய் ....
சரியாய் அமர்த்திப் பரிசோதிக்க வேண்டும் !
வாயில் துணி வைக்கச் சொன்னால்
மிகச்சரியாய் முகத்துக்கு நேராய் இருமுவாய் ....
கடிந்து உரைக்காதிருத்தல் வேண்டும் !
நீர் ரத்தம் பரிசோதிக்கச் சொன்னால்
கொள்ளைக்காரனைப் போல் பார்ப்பாய் ....
அவசியம் பற்றி வகுப்பே எடுக்க வேண்டும் !
நாட்கள் மூன்றுக்குப் பரிந்துரைத்தால்
வேளை ஒன்றுக்கு மாத்திரை வாங்குவாய் ...
சகலமும் சரியாக வேண்டும் !
மறுவருகை அடுத்த வாரமென்றால்
மதமே கழித்து வருவாய் .....
அன்று நானே காய்ச்சலில் படுத்திருந்தால்
வந்தது வீணென்று வசை பாடிச் செல்வாய் !
நிச்சயமாய் இது மளிகை அல்ல ....
ஆனாலும் நடந்துகொள்கிறாய் மோசமான
வாடிக்கையாளன்போல்!

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்