தெளிவில்லாத சாம்பல் பிம்பங்களாகவாவது
உன் மனத் திரையில் உண்டா
என் நினைவுகள் ...?
இங்கே
மெருகேறிக்கொண்டே இருக்கும்
உன் நினைவுகளின் வண்ணங்களின்
துல்லியம் கூடிக்கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு வினாடியிலும் ..!
உன் சிறகுகளில்ஒன்று
சலினமின்றி மிதந்து வந்து
என் இமைகளை வருடியபின்தான்
வருகிறது எனக்குத் தினம் உறக்கம்...!
அந்த நிசப்த இருளின்
ஆழத்தில் நான் பயணிக்கையில்
கொத்தி எழுப்பும் உன்
கூரிய மூக்கு ...!
விழித்து உதறி
வெளியில் தேடுகிறேன்
வந்துவிட்டாயா நீயென்று ..!
மீண்டும்
எங்கிருந்தோ மிதந்துவரும்
உன் சிறகொன்று
என் இமை வருட ..!
நன்றி ..!
எனக்காக தினமும்
சிறகுகள் சிந்தும்
உனக்கு...!
No comments:
Post a Comment