போன'தை' மறப்போம் ... வருவ'தை' ஏற்போம்.. நல்ல'தை' நினைப்போம் இல்லார்க்கு நல்லாராய் இயன்ற'தை'ச் செய்வோம்... இனி நம் பாதம் படும் பா'தை' யாவும் புதிய பா'தை'யே ..! தமிழர்க்கிடையே வேற்றுமைக் கிழிசல்கள் 'தை'க்கும் 'தை'ப்பொங்கல் வாழ்த்துகள் ...!!!!
ரத்தத்துல சர்க்கரை அளவு குறைஞ்சிடிச்சி ..! அஞ்சி நிமிஷம் தாமதிச்சிருந்தாலும் காப்பாத்தி இருக்க முடியாது .." -- சாதித்த மகிழ்ச்சியில் மருத்துவர் ! "சரியான நேரத்துல தூக்கிட்டு வந்தோம் ..!"-- பெருமிதத்தில் உறவுகள் !
அதி நவீன ஆப்பிள் ipod கையில் இருந்தும் என் அபிமானப் பாடலை உன் கைபேசியில் நீ உன் அறையிலிருந்து ஒலிபரபியதன் சிலிர்ப்பு ..!
குட் நைட் குறுந்செய்திக்குப்பின்னும் நள்ளிரவு தாண்டி நீண்ட உரையாடல்களின்போதான பரவசம் ...!
உன் sreensaver இல் நானும் என் screensaver இல் நீயும் சிரித்த நாட்களின் படிமத்தன்மை ..!
saaptiyaa ? enna pandra ? ஆங்கிலத்தில் நீ தமிழ் எழுதி நிமிடத்திற்கு ஒருமுறை அனுப்பிய அக்கறைகள்... குறுஞ்செய்தி முத்தங்கள் ...
அத்தனை உணர்ச்சிகளையும் ஹைக்கூக்களை விடவும் நறுக்கெனச் சுருக்கிய உன் smiley களின் பேராற்றல்..!
ஒருநாள் ஏனோ மாற்றிக்கொண்டாய் நீயும் நானும் வேறல்ல என்ற உன் சொல்லையும் உன் செல்லையும் ..! அடிக்கடி low battery என்று இம்சித்தாலும் மாற்றிக்கொள்ளவில்லை என் செல்லையும் ... நீயின்றி நானில்லை என்ற என் சொல்லையும் ..!
இரு தினங்களுக்குமுன் நண்பர் ஒருவர் புதுகையின் பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்துவிட - முகத்தில் காயங்கள் ! மூக்கில் உதிரம் ! முன்பின் தெரியாத நபர் உதவிக்கு வந்து அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் முதலுதவிக்கு சேர்கிறார் . பின் அவரிடம் சாவியை வாங்கிகொண்டு வண்டியை எடுத்து வர விரைகிறார் .இடையில் நண்பர் என்னை அலைபேசியில் அழைக்க ,மருத்துவமனை விரைகிறேன் . அந்த நபர் 1 கிலோமீட்டர் வண்டியை தள்ளிக்கொண்டு வருகிறார் .வண்டி ஓட்ட தெரியாதாம்.விசாரித்ததில் ஆட்டோ ,மருந்துகள் , மருத்துவமனை செலவு என 150 ரூபாய் செலவளித்திருக்கிறார்..நாங்கள் நன்றியுடன் திருப்பித் தர ."ரொம்ப நன்றி சார்! என் ஒரு நாள் சம்பளம் !ரெடிமேட் கடையில் வேலை பாக்கிறேன்! எங்கள் ஊர் பஸ் போயிருக்கும் .. friend வீட்டில் தங்கிட்டு , காலையில் போய்க்கிறேன் " கூறிவிட்டு விறு விறு வென சென்றுவிட்டார் ..... அன்று இரவு பெய்யெனப் பெய்தது மழை !!!!ள் நன்றியுடன் திருப்பித் தர ."ரொம்ப நன்றி சார்! என் ஒரு நாள் சம்பளம் !ரெடிமேட் கடையில் வேலை பாக்கிறேன்! எங்கள் ஊர் பஸ் போயிருக்கும் .. friend வீட்டில் தங்கிட்டு , காலையில் போய்க்கிறேன் " கூறிவிட்டு விறு விறு வென சென்றுவிட்டார் ..... அன்று இரவு பெய்யெனப் பெய்தது மழை !!!!
Monday, March 14, 2011
தேசத்தின் எல்லைக்கோடுகள் தினமும் அழிந்துகொண்டிருக்க ... போர்க்களங்கள் தவிர்த்து ஆடுகளங்களில் மாடுகளை அடக்கும் வீரர்களாய் நாம் ...! அதிலும் பாதுகாப்போடு பார்வையாளனாய் மட்டும் பங்கேற்கும் நம் தலைவர்கள் ..! வெளங்குமடா இந்த இனம் ..!