Saturday, February 11, 2012

கோபமோ சந்தோசமோ
ஹைகூவைவிடவும் சுருங்கச் சொல்லிவிடுகிறாய்
smiley களாய்...!
போன'தை' மறப்போம் ...
வருவ'தை' ஏற்போம்..
நல்ல'தை' நினைப்போம்
இல்லார்க்கு நல்லாராய்
இயன்ற'தை'ச் செய்வோம்...
இனி நம் பாதம் படும்
பா'தை' யாவும்
புதிய பா'தை'யே ..!
தமிழர்க்கிடையே வேற்றுமைக் கிழிசல்கள்
'தை'க்கும் 'தை'ப்பொங்கல் வாழ்த்துகள் ...!!!!
ரத்தத்துல சர்க்கரை அளவு குறைஞ்சிடிச்சி ..!
அஞ்சி நிமிஷம் தாமதிச்சிருந்தாலும்
காப்பாத்தி இருக்க முடியாது .." --
சாதித்த மகிழ்ச்சியில்
மருத்துவர் !

"சரியான நேரத்துல
தூக்கிட்டு வந்தோம் ..!"--
பெருமிதத்தில் உறவுகள் !

உரிரைக் காப்பாற்றிவிட்டு
நசுங்கிக்கிடக்கிறது
குப்பைத்தொட்டியில்
குளுக்கோஸ் பாட்டில் !
உயிரைக் காப்பாற்றியே தீருவேனென்று
தலைகீழாய் தொங்கும்
சலைன் பாட்டில் ..!

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்