
அதி நவீன ஆப்பிள் ipod
கையில் இருந்தும்
என் அபிமானப் பாடலை
உன் கைபேசியில் நீ
உன் அறையிலிருந்து
ஒலிபரபியதன் சிலிர்ப்பு ..!
குட் நைட்
குறுந்செய்திக்குப்பின்னும்
நள்ளிரவு தாண்டி நீண்ட
உரையாடல்களின்போதான பரவசம் ...!
உன் sreensaver இல் நானும்
என் screensaver இல் நீயும்
சிரித்த நாட்களின் படிமத்தன்மை ..!
saaptiyaa ?
enna pandra ?
ஆங்கிலத்தில் நீ
தமிழ் எழுதி
நிமிடத்திற்கு ஒருமுறை
அனுப்பிய அக்கறைகள்...
குறுஞ்செய்தி முத்தங்கள் ...
அத்தனை உணர்ச்சிகளையும்
ஹைக்கூக்களை விடவும்
நறுக்கெனச் சுருக்கிய உன்
smiley களின் பேராற்றல்..!
ஒருநாள்
ஏனோ மாற்றிக்கொண்டாய்
நீயும் நானும் வேறல்ல என்ற
உன் சொல்லையும்
உன் செல்லையும் ..!
அடிக்கடி
low battery என்று இம்சித்தாலும்
மாற்றிக்கொள்ளவில்லை என்
செல்லையும் ...
நீயின்றி நானில்லை என்ற
என் சொல்லையும் ..!