Monday, May 24, 2010

கல்வி போற்றுதும்


சகலருக்குமான சாலையில்
துருவேறிக் கிடக்கிறது
ஆணி ...!

காலில் மிதிபடாமல்
கவனமாய்க் கடக்கிறான்
மெத்தப் படித்தவன் ...!

கையில் எடுத்துத்
குப்பையில் எறிகிறான்
சுயத்தைத் தொலைத்து அலையும்
பைத்தியக்காரன் ....!



கல்வி போற்றுதும்
கல்வி போற்றுதும்
சுயநலம் போதிக்கும்
கல்வி போற்றுதும் ?!

No comments:

Post a Comment

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்